வில்லாதி வில்லன் -ஹீத் லெட்ஜர்

             ஆஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வில்லன் ரோலுக்கு அதுவும் காமிக்ஸ் படத்தில் நடித்ததுக்காக விருது கிடைத்த ஒரே நடிகர் நம்ம ஹீத் லெட்ஜர் தான்.ஆனால் அந்த அவார்ட் வாங்கும் போது அவர் உயிரோடு இல்லைங்கிறது தான் துயரமான சம்பவம்.

               வெறும் 29ம் வயதிலேயே மரணத்தை தழுவி தம்முடைய ரசிகர்கள் மனதில் நீங்கா துயரத்தை விதைத்து விட்டார்.குழந்தை பருவத்தில் சாதாரண ஆவரேஜ் குழந்தையாகவே வளம் வந்தார்.அவருடைய 11ம் வயதில் பெற்றோர்களுக்கிடையில் விவாகரத்தானது.அவருக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய மூத்த சகோதரி மட்டுமே.ஆஸ்திரேலியாவில் ஒரு குணச்சித்திர நடிகையாக இருந்த தன் சகோதரியின் நடிப்பு திறமையை பார்த்து வளர்ந்த ஹீத்துக்கு நடிக்கும் ஆவல் வந்தது.நடிப்பை பற்றி எந்த வித கோர்ச்சுக்கும் போகாத ஹீத் துக்கு ஆரம்பம் முதலே சறுக்கல் தான்.நடிப்புக்காக ஆரம்ப கோர்சே முடிக்காத இவர்தான் பின்நாளில் வில்லன்களுக்கான இலக்கணத்தையே தன் நடிப்பின் மூலம் மாற்றி எழுதினான்.
                 டி.சி காமிக்ஸ் வெளியிட்ட பேட்மேன் தி பிகினிங் படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைக்கவே, அதன் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படத்தின் அடுத்த பாகத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டிருந்தார்.அக்காரணத்தினால் பேட்மேன் மற்றும் ஜோக்கர் கேரட்டர்களுக்கு புதுமுக நடிகர்களை களமிருக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.அந்த ஆடிசனுக்கு பல முன்னணி நடிகர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
               ஹீத்லெட்ஜரும் ஆடிசனுக்கு சென்றிருந்தார்.ஆனால் அவர் போனது பேட்மேன் கேரட்டருக்குத்தான்.அவருக்கு வழங்கபட்டதோ ஜோக்கர் கேரட்டர்.அது அவருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.ஏனென்றால் அந்த ஜோக்கர் கேரக்டர் படத்தோட, சொல்லப்போனால் பேட்மேனோட பவர்ஃபுல் கேரக்டர்.ஜோக்கர் கேரக்டர் ஹீத்துக்கு கொடுக்கப்பட்டதிற்கு அந்த காலத்தில் அமெரிக்கர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையே ஏற்படுத்தியது.

                   அமெரிக்காவில் பெரிய பெரிய ஆக்டர்கள் எல்லாம் ஆடிஷன் போனபோதும் ஒரு ஆஸ்திரேலியா ஆக்டர் அதுவும் 27லே வயதான சின்ன பயனுக்கு கொடுத்த இந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ஒரு பையித்தியம்,இந்த பையனாலேயே டார்க் நைட் படம் மிகப்பெரிய ஃப்ளாப் ஆகப்போகுதுனு பத்திரிகைகள் அனைத்தும் திட்டிதீர்த்தன.

                   ஆனால் நோலன் மட்டும் ஹீத் லெட்ஜர் மேல் அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார்.லெட்ஜரும் அவருடைய நம்பிக்கையை வீணடிக்கவில்லை.ஆனால் அதற்கு அவர் கொடுத்த விலை அவர் உயிர்.ஆமாங்க உண்மை தான் அவருடைய உயர் தான்.நாம் சும்மா பேச்சுக்கு உயிரகுடுத்து நடிக்கார்னு சொல்லுவோம்.ஆனால் நடிப்புக்காக உயிரையே கொடுத்த ஒரு உன்னத நடிகன் தான் ஹீத்.

                    ஜோக்கர் கேரக்டர் தனக்கு கிடைத்ததும் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க நினைத்த ஹீத் அந்த ஜோக்கர் கேரக்டருக்கு தன்னை அர்ப்பணிக்க தொடங்கினார்.அது ஒரு சைக்கோ கேரக்டர், அதனால் ஹீத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சைகோவாக மாறத் தொடங்கினார்.அதற்கான வேலையில் லண்டனில் ஒரு ஓட்டலில் தனியறை எடுத்து கிட்டத்தட்ட 43நாள்கள் தனிமனித தொடர்பின்றி ரூமுக்குள்ளே அடைந்திருந்து ஒரு சைக்கோ எப்படி பிகே பன்னும்னு பிராக்டிஸ் எடுத்து எடுத்து 43நாள் கழித்து ரூமவிட்டு வெளியே வரும் போது முழு சைக்கோவா வந்தார்னா நம்ப முடியுதா?

                சூட்டிங் ஸ்பாட்ல இவர் கூட நடிக்கக்கூட நடிகர், நடிகைகள் பயந்தார்கள்னா எவ்வளவு அர்ப்பணிப்பு பாருங்க.படம் நல்ல படியாக முடிந்தாகிவிட்டது.ஆனா அந்த ஜோக்கர் கேரக்டர் ஹீத் லெட்ஜரை விடாமல் துரத்தியது.படத்திற்காக மனநோயாளியாய் நடிப்பதற்கு தினமும் 2 மணி நேரம் மட்டுமே தூங்கிய ஹீத்துக்கு அந்தப் பழக்கம் படம் முடிந்த பின்னரும் தொடர ஆரம்பித்தது.

                 இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஹீத் மருத்துவ உதவியை நாடினார்.அவர்களும் தூக்கமாத்திரை களை பரிந்துரைக்க, அந்த மாத்திரைகளை போட்டாலும் தூக்கம் வரவில்லை.மன அழுத்தம் அதிகமாக நிறைய மாத்திரைகளை உபயோகிக்க தொடங்கினார்.இறுதியில் ஒரு நாள் அதிகாலை தனது அறையில் மரணத்தை தழுவினார்.

              இவர் நடித்த டார்க் நைட் படம் அவருடைய இறப்புக்குப் பின் தான் வெளிவந்தது.பல அவார்ட் களையும் வாரிகுவித்தது.அனைத்து நடிகர்களின் கனவான ஆஸ்கார் விருதையும் பெற்றுத்தந்தது.குழந்தைப் பருவத்தில் பிரிந்து சென்ற பெற்றோர்கள் இணைந்து இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

                 இன்றளவும் இவர் நடித்த அந்த ஜோக்கர் கேரக்டர் பல படங்களில் அங்கம் வகித்தாலும் எவராலும் இவரைவிட சிறப்பாக செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணனின் மகன்- இந்திரஜித்

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

இரும்பு மனிதன் - புருஸ்லீ