எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

அங்கோர்வாட் என்பது கம்போடியாவில் உள்ள ஒரு இந்து கோவில் ஆகும். அங்கூர் என்றால் நகரம், வாட் என்றால் கோவில்.கோவில்களின் நகரம் என்பது அதன் பொருள். இன்றளவும் இதுவே மனிதன் உருவாக்கிய வழிபாட்டு தலங்களிலே மிகப்பெரியது . இதன் பரப்பளவு மட்டும் 400 ஏக்கர்.இதன் நான்கு பக்க சுவர்களும் தலா3.6 கிலோமீட்டர் நீளமுடையது என்றால் அதன் பரப்பளவை நினைத்து பாருங்கள். இரண்டாம் சூரிய வர்மன் என்ற மன்னரால் 12ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோவில் விஷ்ணுவிற்காக கட்டப்பட்டது.

           பின் நாட்களில் இக்கோவில் புத்த வழிபாட்டு தளமாக மாறியது. இக்கோவில் கடவுள்களின் இருப்பிடமான மேரு மலையினை குறிப்பதாக உள்ளது. மேற்கத்தியர்கள் இக்கோவிலை ரோமானியர்கள் கட்டியிருக்கலாம் என நம்பிருந்தனர். இந்த கோவிலைச் சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு தூய்மையான நீர் ஓடக்கூடிய அகழி அமைந்துள்ளது .இக்கோவிலின் மூலவர் விஷ்ணு. பிரம்மா மற்றும் சந்திரனுக்கும் இங்கே வழிபாட்டு தலங்கள் உள்ளது . தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் போன்ற 20 கோவில்களை அங்கோர்வாட்டுக்குள் அடைக்கலாம். 
              வெறும் 37 ஆண்டுகளில் இக்கோவில் கட்டிமுடிக்கப்பட்டது என்னும் செய்தி ஆச்சரியம் அளிக்கிறது. இன்றைய நவீன தொழில் நுட்பம் கொண்டு கூட இக்கோவிலை இவ்வளவு நேர்த்தியாக கட்ட குறைந்தது 300 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர் கட்டட கலை நிபுணர்கள். இக்கோவிலில் திரும்பிய திசையெல்லாம் கலைச் சிற்பங்கள் குவிந்து கிடக்கின்றன.அங்கோர்வாட் கோவிலை முழுவதுமாக படம் பிடிக்க வேண்டுமானால் பூமியிலிருந்து 1000அடி உயரத்திற்கு மேலே சென்று தான் இக்கால நவீன கேமராக்களாலும் படம் பிடிக்க இயலும்.இக்கோவிலை மேலே இருந்து பார்க்கும் போது மூன்று அடுக்குகளாக காட்சி அளிக்கிறது.முதல் அடுக்கு சுவரில் ராமாயண,மகாபாரத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.இரண்டாம் அடுக்கின் நான்கு மூலைகளிலும் நான்கு மிகப்பெரிய சதுர வடிவ தொட்டிகள் உள்ளது.மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி அமைந்துள்ள ஐந்து கோபுரங்கள் உள்ளன.
               இக்கோவிலுக்கு நான்கு பெரிய நுழைவு பாதைகளும் உள்ளன.அதில் மன்னன் நுழையும் நுழைவாயில் அருகே மிகப்பெரிய 7தலை நாகச்சிலையும் உள்ளது.இன்றுள்ள அனைத்து கோவில்களும் கிழக்கு புறத்தில் அமைந்திருக்க, அங்கோர்வாட் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
கம்போடியாவின் பூர்வ குடிகளான கெமர் இனத்தைச் சேர்ந்தவர் தான் இரண்டாம் சூரிய வர்மன்.இவனுக்கும் சாம்பாக்களுக்கும் இடையேயான போரில் சூர்யவர்மன்,ராஜராஜ சோழன் உதவியையும்,சாம்பாக்கள் விஜயநகரப் பேரரசு உதவியையும் நாடினர்.ஆனால் நடைபெற்ற பெரும் போரில் சாம்பா மற்றும் விஜயநகரப் பேரரசு கூட்டணி படுதோல்வி அடைந்தது.இப்போரில் வெற்றி பெற்ற சூரிய வர்மன் தனது 14ம் வயதில் அரியணை ஏறினான்.பின்பு அவன் 700க்கும் மேற்பட்ட கோவில்களை அமைத்தான் . இறுதியாகவே அங்கோர்வாட் கோவிலை கட்டியுள்ளார். இக்கோவில் தானியங்களை சேமிக்கவும் , போரின்போது நாட்டு மக்களை பாதுகாக்கவும் உதவியது . சூரிய வர்மனின் மரணத்திற்கு பிறகு கம்போடியா சாம்பாக்களால் கைப்பற்றப்பட்டது .
  
          பின்னர் 7ஆம் ஜெயவர்மன் மீண்டும் கம்போடியாவை கைப்பற்றினான். இருப்பினும் அங்கோர்வாட் கோயிலை விட்டு சிறிய தொலைவில் தனது தலைநகரை நிறுவினான். நாளடைவில் அக்கோவில் மக்களால் நிரந்தரமாக கைவிடப்பட்டது. கிட்டத்தட்ட 200 வருடம் மனித நடமாட்டம் இல்லாமல் போனதால் காடு செழித்து வளர்ந்து கோவிலையே மறைத்தது.கோவிலும் படிப்படியாக சிதலமடைய தொடங்கியது.பின்நாளில் ஹென்றி என்ற பிரெஞ்சு வனவியல் ஆராய்ச்சியாளரால் கண்டறியப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
              1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் அங்கோர்வாட் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.உலகின் மிகப்பெரிய கலைப் பொக்கிஷமாக கருதப்படும் இந்த கோவிலை பார்க்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் குவிகின்றனர்.8வது உலக அதிசியமாக கருதப்படும் இக்கோவில் சூரிய உதயம் நமது கன்னியாகுமரி போல் பிரசித்திபெற்றது.கம்போடியா அரசு இக்கோவிலை தனது தேசியக் கொடியில் பதிந்துள்ளது.
                 கெமர் இனத்தால் இக்கோவில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜராஜ சோழனிடம் சூரிய வர்மனுக்கிருந்த நட்பை வைத்து பார்க்கும் போது தமிழர்கள் இக்கோவிலை கட்ட உதவியிருக்கலாம் என்று நம்பத் தூண்டுகிறது.மாமல்லபுரம் குடவரைக்கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் போன்ற தமிழ் நாட்டின் கலைப்பொக்கிஷத்தை வைத்து பார்க்கும் போது இக்கோவிலை கட்டியது தமிழர்கள் தான் என்பது கண்கூடாகவே தெரிகின்றது.


                            நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணனின் மகன்- இந்திரஜித்

இரும்பு மனிதன் - புருஸ்லீ