தன்னம்பிக்கை கதைகள்-ஸ்டீவ் ஜாப்

இது வரை உலகம் கண்ட மூன்று முக்கிய ஆப்பிள்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
* ஆதாம் ஏவால் சாப்பிட்ட முதல் ஆப்பிள்
* நியுட்டன் புவி ஈர்ப்பு விசை பற்றி அறிய உதவிய இரண்டாம் ஆப்பிள்
*மனித வாழ்வியல் முறையையே திருப்பி போட்ட மூன்றாம் ஆப்பிள்


                  ஆப்பிள் கம்பெனியை ஆரம்பித்து மொபைல் மற்றும் கம்புயூட்டர் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப் பற்றி தான் இப்பதிவில் பார்க போகின்றோம்.

                   திருமணம் ஆகாத இரண்டு கல்லுரி மாணவர்களுக்கு மகனாய் பிறந்தார். குழந்தையை பராமரிக்க முடியாத பெற்றோர்கள் நடுதர குடும்பத்தை சேர்ந்த பால் ஜாப் கிளாரா ஜாப் தம்பதிக்கு தத்து கொடுத்தனர்.
இளம் வயதில் படுசுட்டியாக செயல் பட்டார் ஸ்டீவ் .கல்லூரி படிப்பை வெறும் ஆறுமாதங்களிலே நிறுத்திவிட்டார்.தன் நண்பர்களுடன் அறையில் தரையில் படுத்து தூங்க நேரிட்ட ஸ்டீவுக்கு பிற்காலத்தில் தான் கட்டிய ஆடம்பர பங்களாவில் கட்டில் மட்டும் இடம் பெறவில்லை என்பது வியப்பை தருகிறது. வாரத்தில் ஒரு நாள் நல்ல உணவு சாப்பிடுவதற்காக ஏழு மயில் தொலைவு நடந்து சென்று ஹரிகிருஷ்ணா மடத்தில் உணவு உண்பாராம். ஸ்டீவ் முதன் முதலில் தன் நண்பருடன் சேர்ந்து தன் வீட்டு கார் கேரஜில் ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் கம்பெனியின் சொத்து மதிப்பு ரஷ்ய ஒட்டு மொத்த சந்தை மதிப்பை விட இன்று அதிகம்.
 
               1974ல் இந்தியா வந்த ஜாப் புத்த மதத்தை தழுவினார்.இங்கு ஒரு யோகியை போல் அலைந்து வந்த ஜாப் தோல் வியாதி காரணமாக தன் தாய்நாட்டிற்கு சென்று மீண்டும் தன் தொழிலில் கவனம் செலுத்தினார்.பின்நாளில் பேஸ்புக் நிருவனர் மார்க் தன் நிருவணத்தை மூடிவிட முடிவு செய்திருப்பதாக ஸ்டீவிடம் கருத்து கேட்க,ஒரு முறை இந்தியா சென்று விட்டு வா நிச்சயம் மாற்றம் கிடைக்கும் என்று கூறியதும் இன்று மார்கின் சொத்து மதிப்பும் உலகம் அறிந்தது தான்.
 
                ஸ்டீவ் ஜாப் தன் வாழ்நாளில் மீனை தவிர வேறெந்த அசைவத்தையும் சாப்பிட்டது கிடையாது.அவரது முதல் தொழில் அனுபவம் முக்கியம் வாய்ந்தது.ஒரு வீடியோகேம் கம்பெனிக்கு கம்புயூட்டர் செய்து தருவதாக கூறி அவர்கள் அளித்த 50கம்புயூட்டர்க்கு எழுத்து பூர்வமான ஆர்டர் பார்ம் வாங்கி அதைக்காட்டி மூலப்பொருட்களை லோனில் வாங்கி லாபத்தை தொடங்கினார்.
 
                 இவரது அதிரடி நடவடிக்கைகளால் கம்பெனியை மிகப்பெரிய அசுர வளர்ச்சி அடைய வைத்த ஸ்டீவ் ஜாப் அதே அதிரடியால் வீழ்ச்சியடையவும் செய்தார்.அக்காரணத்தால் அவர் ஆரம்பித்த கம்பெனியாலே வெளியேற்றப்பட்டார்.
 
                  ஆனால்  ஸ்டீவ் ஜாப் மனம் தளராமல் நெஷ்ட் என்னும் கம்பெனியை உருவாக்கி அதன் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.பின் பிக்ஸார் என்னும் அனிமேஷன் படங்களை உருவாக்கும் கம்பெனியை நிருவினார்.டாய் ஸ்டோரி,பைன்டிங் நிமோ போன்ற பிரமாண்ட படங்களை பிக்ஸார் நிருவனம் இயற்றியது நாம் அறிந்ததே.
                   ஸ்டீவ் வெளியேறிய காலத்தில் ஆப்பிள் நிருவனம் பெரும் சரிவை சந்தித்தது. ஸ்டீவ் ஆப்பிள் நிருவனத்துக்குள் திருப்பி அழைக்கப்பட்டார்.நிருவனத்தை சரிவில் இருந்து மீட்ட ஜாப் அடுத்தடுத்து வெளியிட்ட I POD,I PAD,I PHONE மூலம்உலகையை ஆப்பிள் நிருவனத்தின் பக்கம் திருப்பினார்

                  பொருட்களை உருவாக்குவது மட்டுமில்லாமல் அதன் பேக்கிங் மீதும் அவர் அதிக கவனத்தை செலுத்தினார். முதன் முறையாக போன் வாங்கியவர்கள் அதை எப்படி பிரித்து பார்க்கும் போது மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதை கவனம் கொண்டு பேக்கிங்களை அமைத்தார்.

                 ஒருமுறை தனது தந்தை தனக்குகூறிய அறிவுரையை நினைவு கூர்ந்த ஜாப், ஒரு அலமாரியின் பின் பக்கம் யாருக்கும் தெறியவில்லை என்றாலும் அதனையும் கவனமுடன்அழகாகவும் உறுதியாகவும் செய்ய வேண்டும் என்பார்.

                     புகழின் உச்சியில் இருந்த ஜாப் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தன் மரணம் நெருங்கி கொண்டதை உணர்ந்த ஜாப் , தன் பணிகளில் ஓய்வு பெற்று கொண்டு மீதமுள்ள வாழ்க்கையை குடும்பத்தினருடன் கழித்தார்.அந்த கடைசி காலக்கட்டத்தில் தான் ,தன் வாழ்க்கையை பணம், புகழ் சம்பாதிப்பதிலேயே வீணடித்து விட்டதை உணர்ந்தார் ஸ்டீவ் ஜாப்.

                        அதை அனுபவிக்க விடாமல் கடவுள் தன் ஆயுளை குறைத்தது ஜாப்புக்கு சற்று ஏமாற்றமே. மரணத்தில் நாம் எதையும் எடுத்துக்கொண்டு போவதில்லை என்தை உணர்ந்த ஜாப், நம் கடைசி காலதில் நம் கூட வருவது நாம் செலவழித்த அற்புதமான நேரங்களே என்பதை உணர்ந்தார்.

                       அக்டோபர்5,2011ல்   தனது 56 வயதில் ஸ்டீவ் மரணம் அடைந்தார். 

மனிதர்கள் வரலாம் போகலாம் ஆனால் ஸ்டீவ் மாதிரி ஒருசில மனிதர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள் என்றால் அது மிகையல்ல. மரணப்படுக்கையில் அவர் கடைசியாக கூறிய "Oh wow, Oh wow, Oh wow" என்ற சொல்லுக்கு இன்னும் விடை தெறியவில்லை. அப்படி ஒரு அதிசியத்தை ஸ்டீவ் பார்த்திருப்பார் போலும். பொருட்களை உருவாக்குவது மட்டும் அல்ல அதற்கு  காப்புரிமை பெறுவதிலும் ஸ்டீவ் கெட்டிக்காரர். சுமார் 300 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றிருந்தார் ஸ்டீவ் ஜாப். 
                    தனி ஒரு மனிதனின் மரணம் உலக மக்கள் அனைவருக்கும் துக்கமாக மாறுகிறது என்றால் அந்த மனிதரால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையால் பயன் அடைந்தாலொழிய அது சாத்தியமில்லை என்பதே உண்மை......
 
 
                                                                  நன்றி

                     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணனின் மகன்- இந்திரஜித்

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

இரும்பு மனிதன் - புருஸ்லீ