இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரும்பு மனிதன் - புருஸ்லீ

படம்
20ம் நூற்றாண்டின் மிகுந்த செல்வாக்கான மனிதர் என்று டைம்ஸ் இதழால் புகழப்பட்ட புருஸ்லீ பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகின்றோம்.               குங்பூ கலையுடன்,உலகின் முன்னனி கலாச்சார சண்டை முறைகளை இணைத்து ஜி-குன்-டோ என்னும் புதிய தற்காப்பு கலையை உருவாக்கினார்.அதிவேகமான செயல்பாடுகளுக்கும்,அசாதாரமான அசைவுகளுக்கும் சொந்தக்காரர்.அற்புதமான திறமைகள் பலவற்றை பெற்றாலும், அவற்றில் எவராலும் இன்றளவும் முறியடிக்க முடியாத சில சாதனைகளைப் பற்றி கூறுகிறேன். அவரது பேமஸான சைடு கிக்கிங் என்னும் முறைப்படி 45கிலோ எடை கொண்ட மணல் மூட்டையை சிதறடிக்கும் திறன் கொண்டவர். லின்சாக் என்பது ஒருவகை தற்காப்பு கருவி . அதை இரண்டு கைகளிலும் ஒரே சமயத்தில் கைக்கு ஒன்றாக அதிவேகமாக சுற்றும் திறன் படைத்தவர். ஒரு நொடியில் 9 முறை கையாலும் , 6 முறை காலாலும் தாக்கும் திறன் படைத்தவர் .                      இவர் விடும் 1 inch punch மிகப் பிரபலம் .ஒரு inch இடைவெளியில் இவர் விடும் குத்தானது 80 கிலோ எடை கொண்ட ஒரு மனிதரை 15 அடி நகர்த்தும் சக்தி கொண்டது. இரண்டு கை கொண்டு 1500 முறையும் , ஒரு கை கொண்டு 400 முறையும்,

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

படம்
அங்கோர்வாட் என்பது கம்போடியாவில் உள்ள ஒரு இந்து கோவில் ஆகும். அங்கூர் என்றால் நகரம், வாட் என்றால் கோவில்.கோவில்களின் நகரம் என்பது அதன் பொருள். இன்றளவும் இதுவே மனிதன் உருவாக்கிய வழிபாட்டு தலங்களிலே மிகப்பெரியது . இதன் பரப்பளவு மட்டும் 400 ஏக்கர்.இதன் நான்கு பக்க சுவர்களும் தலா3.6 கிலோமீட்டர் நீளமுடையது என்றால் அதன் பரப்பளவை நினைத்து பாருங்கள். இரண்டாம் சூரிய வர்மன் என்ற மன்னரால் 12ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோவில் விஷ்ணுவிற்காக கட்டப்பட்டது.            பின் நாட்களில் இக்கோவில் புத்த வழிபாட்டு தளமாக மாறியது. இக்கோவில் கடவுள்களின் இருப்பிடமான மேரு மலையினை குறிப்பதாக உள்ளது. மேற்கத்தியர்கள் இக்கோவிலை ரோமானியர்கள் கட்டியிருக்கலாம் என நம்பிருந்தனர். இந்த கோவிலைச் சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு தூய்மையான நீர் ஓடக்கூடிய அகழி அமைந்துள்ளது .இக்கோவிலின் மூலவர் விஷ்ணு. பிரம்மா மற்றும் சந்திரனுக்கும் இங்கே வழிபாட்டு தலங்கள் உள்ளது . தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் போன்ற 20 கோவில்களை அங்கோர்வாட்டுக்குள் அடைக்